முதல் செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆன

முதல் செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆன

anpukodu
anpukodu
Nov 4, 2010, 12:48 PM |
0

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் 2 ஆவது இடத்திலிருந்த உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2804 புள்ளிகள் பெற்று முதலிடத்தைக் கைப்பற்றினார்.

சீனாவில் நடந்த 'பெர்ல் ஸ்பிரிங் செஸ்' தொடரில் 2 ஆவது இடத்தைப் பெற்ற ஆனந்த், இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார். ஆனந்த் 2804 புள்ளிகள் பெறுவது இதுவே முதல் முறை. இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு 2803 புள்ளிகளுடன் இவர் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

தரவரிசைப் பட்டியலின் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களை, முறையே நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சன் (2802 புள்ளிகள்) மற்றும் அர்மேனியாவின் லேவான் அரோனியன் (2801 புள்ளிகள்) கைப்பற்றினர்.

சதுரங்க பிரியன் அன்ரனி