தமிழ் எம்செம்மொழி!!!

தமிழ் எம்செம்மொழி!!!

guru200773
guru200773
Mar 11, 2013, 9:48 AM |
1

தமிழ் எம்செம்மொழி!!!

 

உயிருக்கு உன்னதமானது மூச்சு
அதை அடக்கி உருவானதே உயிரெழுத்து
உடலைக் கொண்டு ஒலிப்பதே மெயெழுத்து
உடலும் உயிரும் ஒன்றியதே எங்கள் பேச்சு!!!

சொல்வளம் குறையா ஒலிக்கும் சூரியன் நீ 
அதுவே கலப்பு கருமேகங்களை சுட்டெறிக்கும் தீ 
குயில் கூவும் விதம் மாறினாலும், சுற்றும் பூமி தடம்மாறினாலும் 
உந்தன் தனித்தன்மை என்றும் மாறா!!!

தன்னக்கென கற்கால கணித கணிப்பு
எங்கேயும் மாறா உன் உச்சரிப்பு
உன்னயங்களை எண்ணி பலமொழிக்குள் தவிப்பு
இவை கண்டு உள்ளங் கொண்டது பூரிப்பு!!

இயல்பான இலக்கணங்களை தன தாக்கி 
அதன் எளிமையால் பிறமொழிகளுக்குத் தாயாகி 
சொற்களை சோட்றாக்கி, அதிலறிவினை பிசைந்துட்ட 
சிறுபிள்ளைகலாய் உண்ண மறுத்ததுதான் ஏனோ!!!

பிறப்பினிலே தொன்மை , தனித்து இயங்கும் தனித்தன்மை
சொற்களிலே பசுமை, வார்தைகளில் வன்மை,
அதில் உள்ளதடா பல கலாச்சாற ஒண்மை
மாருதட்டி சொல்லுவோமே!! எதுவே எங்கள் தாயின் செம்மை!!

                                   - கா.குரு பாகேஸ்வர பாண்டியன்