உழைப்பே உயர்வு!!!

உழைப்பே உயர்வு!!!

guru200773
guru200773
Mar 11, 2013, 10:05 AM |
0
உழைப்பே உயர்வு!!!
உழைத்திடு நண்பா!!! உழைத்திடு நண்பா!!!
வாழ்வில் உயர்ந்திடு நண்பா!!! உயர்ந்திடு நண்பா!!!
வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை 
தோல்வியையும் தோழ்களாய் கொண்டு 
நீ உழைத்திடு நண்பா உழைத்திடு நண்பா!!
முயற்சியால் பிறக்கும் வாழ்வில் உதயம் 
அயராது உழைத்தால் அனைத்தும் சாத்தியம் 
உழைப்பிற்கு என்றும் ஈடாகா ஊதியம்
எதுவே வாழ்வின் தாரக மந்திரம்
என உணர்ந்திடு நண்பா!! உணர்ந்திடு நண்பா!!
உழைக்கும் உழவனின் சொத்தே வியர்வை 
சுடும் சூரியன் அவனுக்கோர் போர்வை
வாழ்கையென்பது தோழ்வி முத்துகளின் கோர்வை 
முறையாய் கோர்க்க; விடா முயற்சி தேவை 
ஆதலால் விழித்திடு நண்பா!! விழித்திடு நண்பா
ஓயாது உறங்காது செய்வதெல்லாம் உழைப்பல்ல
ஒற்றுனியாய் வாழும் வாழ்க்கையெல்லாம் வாழ்வல்ல
அதனினும் ஓங்கியது பிச்சை; அதுதாழ்வல்ல
பெருமலையாய்யினும், சிற்றேறும்பின் கால்களுக்கு தோய்வல்ல 
உழைப்பை போற்றிடு நண்பா!!! போற்றிடு நண்பா!!!
காலம் கடந்து முயற்சித்து, இறைவனை ஏசாதே!!
வெற்றிக்கு உழைக்கதே,தோல்வியில் கற்க மறக்காதே
பலனேண்ணா கிட்டிய புகழ்லேன்றும் மங்கதே!!
பின் இழிவு கசக்காதே!!! எவற்றை உன்னர்தாலே
வாழ்வு தலைதிடும் நண்பா!! தலைதிடும் நண்பா!!

                                                  - கா.குரு பாகேஸ்வர பாண்டியன்