உன்னில் கடவுளைக் காண்கின்றேன்

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்

guru200773
guru200773
Apr 17, 2013, 1:18 PM |
9

Tuje meih rab diktha hai is one of the great melody Hindi song from the movie Rab Ne Banadhi Jodi. I like this song very much so it inspired me to write a tamil version of this song. Critisism and Comments are welcome :) :)

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்

நீ எந்தன் உயிரே, உன்னை நான் போற்றுவேன்

நான் உந்தன் நிழல்லே உன்னை நான் சுற்றுவேன் 

நீ தான் என்னுயிர்  துடிப்பே, அட உன்னால் நான் துடிப்பேன் 

ஐயோடா!! உந்தன் சிரிபிலே, அந்த சூரியன் மங்கிடுமே 

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்அன்பே!!! நான் என்செய்ய 

உன்னை வணக்கி நின்றேனே அன்பே நான் என்செய்ய 

நீ நிற்கும் தூரம், கைகெட்டும் தூரம் 

இருபினும், காதலில் மிக தூரமே!!  

ஒ ஓ ஒ !! அள வில்லா கோவம் 

அள வில்லா பாசம் 

இதைக் காணவே இப்பிறவி தான் எடுத்தேனோ!!  

நீ தான் எந்தன் உணர்வே, உன்னால் நான் உணர்கிறேனே 

உன் அழகில் நானோ , இவ் உலகாய்  சாய்ந்தேனோ !!! 

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்அன்பே!!! நான் என்செய்ய 

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்அன்பே!!! நான் என்செய்ய 

உன்னை வணக்கி நின்றேனே அன்பே நான் என்செய்ய 

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்அன்பே!!! நான் என்செய்ய   

வீசுதே வீசுதே வீசுதே அவள் கூந்தலின் மணம் இங்கு வீசுதே 

வீழுதே வீழுதே வீழுதே அவன் மெலிந்த மனம் இங்கு வீழுதே 

 கடவுளே சேர்த்த ஜோடி  நாமே!!!

சலசல காற்று குளிர்விக்கும் காற்று 

உன் கூந்தலின் மனங்கவரவே வீசுதோ 

ஒ ஓ ஒ !! நீ சிரிக்கும் போதும்,  

வெட்க படும் போதும் 

இவ்வுயிர் பிரியும் பாக்கியம் தான் கிட்டுமோ!!! 

நீதான் பெண்மையின் சின்னம், உன்னால் என்னாண்மை வளரும் 

 உன் அன்பில் நானோ , உருகும் பனிமலையாய் கரைந்தேனோ!!! 

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்அன்பே!!! நான் என்செய்ய 

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்அன்பே!!! நான் என்செய்ய 

உன்னை வணக்கி நின்றேனே அன்பே நான் என்செய்ய 

உன்னில் கடவுளைக் காண்கின்றேன்அன்பே!!! நான் என்செய்ய

வீசுதே வீசுதே வீசுதே அவள் கூந்தலின் மணம் இங்கு வீசுதே 

வீழுதே வீழுதே வீழுதே அவன் மெலிந்த மனம் இங்கு வீழுதே 

 கடவுளே சேர்த்த ஜோடி  நாமே!!!

- கா.குரு பாகேஸ்வர பாண்டியன்